கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணைக் கலெக்டராக பணியாற்றி வந்த நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணனூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் தான் நவீன் பாபு இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்ட நிலையில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
Also Read : சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உளப்பட ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்த நிலையில் அழையா விருந்தாளியாக வந்த பஞ்சாயத்து தலைவர் திவ்யா துணை கலெக்டர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்நிலையில், நேற்று நவீன் பாபு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நவீன் பாபு உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன பாபு மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.