டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் டெங்கு காய்ச்சலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
கொசுவினால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் விதமாக, உலக அளவில் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், ” டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்
அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்றும் இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர் ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன” என்றும தெரிவித்தார்.