சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் இன்று செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 17ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25ம் தேதி தேர் திருவிழாவும், 26ம் தேதி மகா அபிஷேகமும், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் நடைபெற்றது.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.
இந்த நிலையில்,இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பதாகையை அகற்ற சென்ற போது, அதிகாரிகளுக்கும் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த அந்த அறிவிப்பு பதாகை அகற்றப்பட்டத்தை தொடர்ந்து தீட்சிதர்கள் விதித்த தடையை மீறி கனகசபை மீது ஏறி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது ஆத்திரமடைந்து தீட்சிதர்கள் அதிகாரிகளை நோக்கி கூச்சலிட்டு போரட்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
(சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோயிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும்.)