இந்த உலகில் மனிதராக பிறந்த அனைவருக்கும் கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த கலியுகத்தில் கிரக தோஷங்களும் மனித உடலில் பிணிகளும் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட தீராத நோய்களை தீர்க்கவும் பூர்த்தி செய்யவும் ஒரு மந்திரமாக இருப்பது ருத்ர மந்திரம். இந்த ருத்ர பத்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
சிங் சிங் சிவாய ஓம் என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும்.