நடிகர் தனுஷ், தன்னுடைய உதவி இயக்குனர் ஆனந்தின் திருமணத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கோலிவுட்டில் செம்ம பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ், தன் கைவசம் 4 படங்கள், மற்றும் பாலிவுட்டில் 1 படம், டோலிவுட்டில் 1 படம் என நிற்க கூட நேரம் இல்லாமல் பம்பரம் போல் சுழன்று வருகிறார். ஆனாலும், இத்தனை பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். தனுஷ் இயக்கம் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் இயக்கத்தில், வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ‘ராயன்’ எனவும் பெயரிட்டு உள்ளனர்.
ராயன் படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டையடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் தனுஷிடம் உதவி இயக்குனராக ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.
ஷூட்டிங் பிசியால் ஆனந்தின் திருமணத்தில் தனுஷால் கலந்துகொள்ள முடியாமல் போன நிலையில், ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக வந்து புதுமண ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தனுஷ்.
அவருடன் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த கென் கருணாஸும் உடன் சென்றுள்ளார். பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் உதவி இயக்குனரின் திருமணத்தில் நடிகர் தனுஷ் சர்ப்ரைஸாக வந்து கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.