உலகம் முழுவதும் வெளியாகும் படங்களின் தரத்தை மதிப்பிடும் இணையதளமான IMDb, 2022 ஆம் ஆண்டுக்கான மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் கிரே மேன் என்ற ஹாலிவுட் படமும், இது தவிர மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என மூன்று தமிழ் படங்கள் என நான்கு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகவே தனுஷ் முதலிடத்தில் இருப்பதாக கூறபடுகிறது.
IMDb இணையத்தளம் வெளியிட்ட டாப் 10 பட்டியல்…
இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை அலியா பட் இரண்டாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 3வது இடத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்ததாக RRR படத்தின் கதாநாயகன் ராம்சரண் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
5வது இடத்தில் நடிகை சமந்தா உள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி முறையே 6 மற்றும் 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர். தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்டிஆர் 8வது இடத்திலும், அல்லு அர்ஜுன் 9வது இடத்திலும் உள்ளனர். அதே போல் கன்னட நடிகர் யாஷ் 10-வது இடம் பிடித்துள்ளார்.