நடிகர் மாரிமுத்து ஜோதிடத்துக்கு எதிராக பேசியதால் தான் அவருக்கு இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என சில இணையதளங்கள் தகவல் வெளியான நிலையில் காயத்ரி ரகுராம் கடுமையாக (Gayatri Raghuram) விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மாரிமுத்து. இதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் அறிமுகமானார்.குறிப்பாக சின்னத்திரையில் இயக்குநர் திருச்செல்வத்தின் ‘எதிர் நீச்சல்’ தொடர் மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது.
நடிகர் மாரிமுத்து தனது உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை கவர்ந்து சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தவராக மாறினார்.
இந்த நிலையில் எதிர் நீச்சல் சீரியலின் டப்பிங் பணியில் ஈடுபட்டு இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். மாரிமுத்துவின் இந்த திடீர் மரணம் சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒட்டுமொத்த திரைத்துறையையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடத்துக்கு எதிராக பேசியதால் தான் அவருக்கு இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என சில இணையதளங்கள் தகவல் பரவி வருகின்றன.இதற்கு நடிகையும் முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,மாரிமுத்து சார் மறைவுக்கு பிறகு பதில் சொல்ல முடியாது ஆனால் அவர்களது குடும்பம் வேதனையில் இன்னும் துக்கத்தில் உள்ளது.
சனாதனவாதிகள் தங்கள் ஜோதிட கணிப்புகளையும், சனாதன தர்மத்தையும் நிரூபிக்கும் இந்த நேரத்தில் கடுமையான தீவிரமான அவர்களின் விமர்சகர்கள் ஒரு பாவத்தின் செயல்.
கடவுளின் கூற்றுப்படி, அவருடைய அழைப்பின் போது, நீங்கள் ஆன்மீகமாக இருந்தாலும் சரி, நாத்திகராக இருந்தாலும் சரி, மரண நேரத்திலிருந்து யாரும் தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.