Tamil Nadu Aided College Admission: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் நடத்தவுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு உள்ளது போல, ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்டவுடன் அடுத்த 15 நாட்களில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தர வரிசை பட்டியல் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் தரவரிசை பட்டியல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளை தேர்வு செய்து சேர்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும்.
ஒற்றை சாளர முறை (Single Window Systern) போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க எதுவாக பின்வரும் அலுவலர்/கல்லூரி முதல்வர்களைக் கொண்டு குழு அமைத்து ஆணையிடப்படுகிறது.