Dissatisfied Lingayats : கடந்த முறை அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களித்த லிங்காயத் இன மக்களின் வாக்குகள் இந்த முறை அதிமுகவுக்கா அல்லது பாஜகவுக்கா ? என்ற கேள்வி வட மாவட்ட அரசியல் களத்தில் அலையடிக்கத் துவங்கி உள்ளது.
மூடநம்பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் விதமாக 12ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் வாழ்ந்த பசவண்ணா என்பவர் உருவாக்கிய மதம் தான் லிங்காயத். இந்த மதத்தை பின்பற்றுபவர்களை வீர சைவர்கள் என்றும் அழைப்பதுண்டு.
தமிழகத்தை பொறுத்த வரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், உதகையிலும் லிங்காயத் சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுக்க இந்த மக்களுக்கு சுமார் 15 லட்சம் ஓட்டுகள் உள்ளதாகவும், அதிக பட்சமாக தளி தொகுதியில் மட்டுமே 40 ஆயிரத்திற்கும் அதிகமான லிங்காயத் ஓட்டுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, அவர்களின் வாக்கு யாருக்கு செல்லும் என்ற கேள்வி வட மாவட்ட அரசியல் களத்தில் அலையடித்து வரும் நிலையில், லிங்காயத் சமூக தலைவர்கள் சிலரிடம் பேசினோம் நாம்.
இதையும் படிங்க : “இந்தா கெளம்பிட்டாங்கள்ல..!” – ஓ.பி.எஸ். பெயரில் 5 பேர் மனுத்தாக்கல்!
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை எங்கள் சமூக வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்குத்தான் செல்லும் Dissatisfied Lingayats.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய முனுசாமி காங்கிரஸ் வேட்பாளர் செல்வகுமாரை விட கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 39 ஆயிரம் வாக்குகள் குறைவாகவும், பர்கூர் சட்ட மன்ற தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகள் குறைவாகவும் பெற்றிருந்தார்.
ஆனால், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் தளி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட வெறும் 9 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தார் முனுசாமி. அதற்கு அந்த தொகுதிகளில் வசிக்கும் எங்கள் லிங்காயத் சமூக மக்களின் வாக்குகள் மொத்தமாக முனுசாமிக்கு விழுந்ததே காரணம்.
எங்கள் சமுதாயத்தை பொறுத்த வரை எங்களுக்கு இருக்கும் ஒரே மன வருத்தம், “திமுக, அதிமுக, பாஜக என யாருமே எங்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தை வழங்கவில்லை” என்பதுதான். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெருவோம் என்பதை 35 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்து இருக்கிறோம். கடந்த 1989 ஆம் ஆண்டு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட எங்கள் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த விஜயேந்திரய்யா வெற்றி பெற்றார்.
எனவே, தற்போது, சமூக பொருளாதார ரீதியாக மைனாரிட்டி நிலையில் இருக்கும் எங்கள் சமூக மக்களுக்கு எந்தக் கட்சி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பார்களோ அவர்களுக்கே இம்முறை ஆதரவை தருவது என முடிவு செய்வதாக இருக்கிறோம். பெரியவர்கள் கூடிப் பேசி இதை உறுதி செய்வார்கள்” என்றனர் அவர்கள்.
எப்படியோ, சட்டசபைக்கு இப்போதே ரிசர்வ் செய்து தங்கள் பலத்தை காட்ட தயாராகி விட்டார்கள் லிங்காயத் இன மக்கள் Dissatisfied Lingayats.
இதையும் படிங்க : ஒரு புயலுக்கே திமுக ஆட்சி ஆடிப்போய்விட்டது!