அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ5000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு பொதுமக்களும் முழுவீச்சில் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த சூழலில் பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுள் தொழிலார்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.
அந்தவகையில், புதுச்சேரியில் 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : குறைந்த செலவில் கேபிள் டிவி சேவையை மத்திய அரசு உறுதி செய்திடுக!
அந்த வரிசையில் புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு நகலானது இன்று அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் தீபாவளி போனசாக அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.