உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 709 பயனாளிகளுக்கு ரூபாய் 4.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரத்தில் படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திருமண நிதி உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 709 பயனாளிகளுக்கு 4.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பொன்முடி அன்பினர் பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் 42 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு 4497 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ,709 பயனாளிகளுக்கு நாலு கொடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 520 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் கண்டால் தான் சமுதாயம் முழுமையாக வளர்ச்சி அடைந்திடும் என்ற நோக்கில் கட்டணம் இல்லாமல் மகளிர் பேருந்து வசதி, மகளிர் சுய உதவி குழு, கடன் தள்ளுபடி மற்றும் வங்கிக் கடன் உதவி உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு,
உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு புதுப்பெண் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் மாதாந்திர ஊக்க தொகை வழங்கும் திட்டம் போன்றவற்றினை செயல்படுத்தி பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற நிலையினை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்கள் என்றும்,
இத்திட்டங்களை மகளிர் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவர் தமிழக முதலமைச்சர் செயல் படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் ஆகும்.
எனவே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றவர்கள். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை பயன்படுத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் காண்பதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.