Lok Sabha Election-சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் தொடர்பாக 3-வது நாளாக திமுக ஆலோசனை நடத்தியது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , தேர்தல் பணிகள் குறித்து திமுக தீவிரம் காட்டி வருகிறது .
மேலும் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் குழுவின் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் கோவை, சேலம், நீலகிரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, தருமபுரி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இதையும் படிங்க:http://CM in Spain : ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு
இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, வெற்றிவாய்ப்பு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினை, போட்டிகளை விட்டுவிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
அதற்காக அனைவரும் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பிப்ரவரி 5-ம் தேதி வரை தொகுதி வாரியாக ஆலோசனை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1751833265118572669?s=20
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே காவிச்சாயம் பூச நினைக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டும் உறுதியோடு தி.மு.கழகம் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக கழகத்தலைவர் முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில்
தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறோம்.
விவசாயிகளும் – தொழில் நிறுவனத்தாரும் நிறைந்த ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் – மாவட்டக் கழக செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – ஒன்றிய நகர –
பகுதி – பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
ஈரோடு தொகுதியில் உள்ள கள நிலவரம் – தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் – அரசுத் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.
INDIA-வின் வெற்றிக்கு மிக மிக அவசியமென எடுத்துரைத்தோம் என்று மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election)குறிப்பிட்டுள்ளார்.