தமிழ்நாட்டை தற்போது ஆண்டு அவரும் திமுக அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா? (DMK Hindu) என தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கிறிஸ்துவ மதத்தின் கடவுளை வணங்கி வழிபட சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது பொது அமைதியை குலைக்க முயன்றதாக தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .
கடவுள் அனைவருக்கும் சமம், அனைவருக்கும் ஆலய பிரவேசம் உரிமை எனும் போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டும்.
யார் மீது வழக்கு தொடுக்க வேண்டுமோ அவர் மீது வழக்கு தொடுக்காமல் மாறாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை மிரட்டி பார்ப்பது சட்ட விரோதம்.
கடவுளை வணங்க சென்ற, கிருஸ்துவ மதத்தை போற்ற சென்ற அண்ணாமலை அவர்கள் மீது வழக்கு தொடுப்பதும், ஹிந்து மதத்தை (சனாதன தர்மத்தை) ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினை போற்றுவதும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை!!
(DMK Hindu) தி மு க அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையா? என தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பி.பள்ளிபட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா தேவாலயத்திற்கு சென்றார்.
Also Read https://itamiltv.com/sharukh-speech-about-director-mani-rathnam/
அப்போது அவரை தடுத்த கிறிஸ்தவ வாலிபர்கள் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என கூறி அண்ணாமலையை வெளியேற சொல்லியுள்ளனர்.
இதையடுத்து இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்த அண்ணாமலை மீது பொது அமைதியை குலைக்க முயன்றதாக தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையை தேவாலயத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜகவினர் தற்போது கண்டன குரலை வலுவாக எழுப்பி வருகின்றனர் .