சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திடீரென திமுக செயலாளர் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ ராஜ வீதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காலை 9 மணிக்கு வருகை தந்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு கலைஞனர் உரிமை தொகையை வழங்குவதற்காக காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்தார். ஆனால்,புதுக்கோட்டை வழக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து வழக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அண்ணாவின் கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தார்.இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் ரகுபதி கையெடுத்து கும்பிட்டு இது போன்று தாமதமாக வரும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காதீர்கள் யென கூறி திடீரென திமுக செயலாளர் காலில் விழுந்தார்.
பொதுவாக முதலமைச்சர் காலில் அமைச்சர்கள் நிர்வாகிகள் விழுவது தான் வழக்கம் . ஆனால் அமைச்சரின் இந்த செயல் அங்குகுடியிருந்த நிர்வாகளிடயே பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. பின்னர் பேரறிஞர் அண்ணா திருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்