Annamalai insisted-பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்,
எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விரைவான விசாரணை எடுக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் , வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
அங்கு அவருக்கு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளால் தாக்கப்பட்டதாக கூறி தான் துன்புறுத்தப்பட்டதை விவரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தான் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் இருவரையும் அதிக வேலை கொடுத்து செய்ய துன்புறுத்தியதாகவும், வீட்டில் உரிய நேரத்தில் வேலை செய்த முடியாத போது கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கபட்ட பெண் தெரிவித்தார்.
மேலும் அந்தத் தாக்குதலில் தனக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் முதலுதவி அளிக்கப்படவில்லை கண்ணீர் மல்க தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உளுந்தூர்பேட்டை போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில்,பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்,
எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விரைவான விசாரணை எடுக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1747939084486787164?s=20
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்,
சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது.
மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.