dhayannidhi maran protest-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் தென்னக இரயில்வே தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன் வாஷிங் பவுடர் நிர்மலா அவர்களால் பாஜகவிற்கு வரும் அனைவரும் சுத்தமாகி விடுகிறார்கள்.2024 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய மக்கள் கொண்டுவரப் போகிறார்கள்
குறிப்பாக இந்திய கூட்டணி கொண்டு வரப் போகிறது அச்சத்தில் மோடியும் நிர்மலா சீதாராமனும் கைது செய்கிறார்கள்.
பாஜக தான் ஊழல் கட்சி, மோடி தான் மிகப்பெரிய ஊழல்வாதி,எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுகிறேன் என்று சொல்லி ஒரு செங்கல்லை வைத்து ஏமாற்றினீர்களே அதை உலகறியசெய்தது உதயநிதி ஸ்டாலின் என்று நிகழ்ச்சியில் பேசினார்.
Also Read : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!!
பின்னர் செய்தியளர்களை சந்தித்த அவர், மோடி அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது 10 ஆண்டுகள் பார்த்தோமானால் அவர் செய்த ஊழல் எல்லாம் மறைத்து ஏதோ அவர்கள் நல்லவர்கள் போல் மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில் செய்துள்ளது அதைப்பற்றி ஒரு விசாரணை நடக்கவில்லை கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் கைது செய்தார்கள்.
தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு முதலமைச்சர் என்று கூட பாராமல் கைது செய்து இருக்கிறார்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சிபிஐயும், அமலாக்க துறையையும் தவறாக பயன்படுத்தும் மோடி ஏன் ஏழரை லட்சம் கோடி ஊழலை விசாரிக்க சிபிஐயும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தவில்லை, சிபிஐ உங்கள் வீட்டு வேலைக்காரர்களா, நீங்கள் சொல்கிற இடத்திற்கு பாய்வார்களா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறதுdhayannidhi maran protest,
சிஏஜி அறிக்கையின் மூலம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 250 கோடி ரூபாய் மோடி அரசு செலவு செய்திருக்கிறது தெரிய வந்திருக்கிறது என்று கூறினார்.