DMK’s Shivaji Krishnamurthy : தனது நாவடக்கமின்மையால் சர்ச்சைகளில் சிக்கும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக வேட்பாளர் குறித்து இணையத்தில் நாகரிமற்ற வார்த்தையைப் பதிவிட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜூன் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, `பேச்சால் வளர்ந்த திமுக, இதுபோன்ற பேச்சுக்களை ஏற்றுக் கொள்ளுமா?’ என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர்.
ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் புகார் அளித்திருந்தார். குஷ்பு தரப்பிலும் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புகார்களின் பேரில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்!!
இதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திமுக தலைமை தற்காலிகமாக நீக்கியது.
இதனிடையே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி DMK’s Shivaji Krishnamurthy சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாகப் பேசக்கூடாது என்று அறிவுரைத்து ஜாமீன் வழங்கினார்.
மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திமுக தலைமை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தது.
சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்ற கோரிக்கை விடுத்ததை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது.
ஆனால், இதெல்லாம் நாடகம் என்றும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை இப்படியெல்லாம் திமுக தலைமை தான் பேசத் தூண்டுவதாகவும் அரசியல் அரங்கில் கிசுகிசுக்கப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு வந்த உதயநிதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தங்களின் ஸ்டார் பேச்சாளர் என்று கூறி வாழ்த்தியதை, இதனோடு தொடர்புபடுத்திச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது எக்ஸ் தளத்தில், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் குறித்து ஆபாச வார்த்தை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தி தெரியாது போடா என்று கூறும் திமுகவில் இருந்து கொண்டு ஹிந்தியில் கூறப்படும் அநாகரிக வார்த்தையைப் பதிவிட்டுள்ளார்.
மதுரையில் பிரசார கூட்டத்தில் டாக்டர் சரவணன் பேசுகையில், மதுரை சிட்டிங் எம்.பி. வெங்கடேசன் செய்த திட்டங்கள் எதுவும் பைனாகுலர் வைத்து பார்த்தாலும் கண்ணுக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி DMK’s Shivaji Krishnamurthy அநாகரிக வார்த்தையை பதிவிட்டிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுகவால் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டு, திமுகவின் ஸ்டார் பேச்சாளராக அடையாளம் காட்டப்படும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இப்படி ஆபாச வார்த்தையை பதிவிடலாமா?
இதை திமுக தலைமை அனுமதிக்கிறதா என்றும் அதிமுகவினர் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். நெட்டிசன்களும் முகம் சுழிக்கிறார்கள்.
இதையும் படிங்க : திமுக ஆட்சியால் தமிழ்நாடு சோர்வு – பிரதமர் மோடி