Congress Election Manifesto : கல்வி, பண்பாடு, நிதிப் பங்கீடு என பல அம்சங்களில் மாநில சுயாட்சி எனும் திமுகவின் கொள்கையை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் அறிக்கை எனும் பெயரில் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பதாக பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், அதுகுறித்து சில தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம்; அம்மாடியம்மோவ்.. காங்கிரஸ் அசத்தல் அறிவிப்பு!
- தங்களின் பல அடிப்படை பழமைவாதக் கோட்பாடுகளை இதில் முழுமையாகத் தளர்த்தியுள்ளனர்.
- வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கையை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானயொரு viamedia solution கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- மாநில சுயாட்சி எனும் திமுகவின் கொள்கையை கல்வி, பண்பாடு, நிதிப் பங்கீடு என பல அம்சங்களில் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியடைய வைக்கிறது.
- அதிகாரங்களை மொத்தமாக ஒற்றைப் புள்ளியில் குவித்து வைக்கும் தனது பழைய வழக்கத்தை முழுமையாக கைவிட்டு மக்கள் மன்றங்களான சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு அவைகளை பகிர்ந்தளிக்கச் செய்யும் முடிவு இது பழைய காங்கிரஸ் அல்ல என்பதை உறுதி செய்கிறது.
- ராகுல் காந்தி நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக நடந்ததில் மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.
- இதற்குப் பிறகு யாரும் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு சாஃப்ட் ஹிந்துத்துவா கட்சி என குற்றம் சாட்ட முடியாதளவுக்கு இந்தத் தேர்தல் அறிக்கை உண்மையான மதச்சார்பின்மை, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகிறது.
இது தாமதம் தான். நவீன உலகத்துக்கான இந்த மாற்றம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கலாம்தான்! ஆனால், தங்களின் பழைமைவாத சிந்தனைகளை உணர்ந்து தெளிந்து கொள்ள பாஜக அரசின் அசுரத்தனமாக அடக்குமுறை அதற்கு தேவைப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தி எனும் ஓரு வேகமான இளைஞன் மிக மேன்மையானதொரு மனிதனாக மாறிட இந்தக் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது Congress Election Manifesto.
தோல்வியை விட சிறந்த பாடம் இல்லை. காலத்தை விட சிறந்த ஆசிரியர் இல்லை.
இந்தத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, “இந்த மாற்றங்களை, அணுகுமுறையை விடாமல் தொடர்ந்தால்” காங்கிரஸ் எனும் அந்த பேரியக்கம் இன்னும் நூறாண்டு உயிர்ப்புடன் வாழும்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : “ஆவது பெண்ணாலே, அழிவது…?”சொன்ன ராமதாஸ் .. மேடையில் சௌமியா கொடுத்த ரியாக்ஷன்