தயிர்(Curd), நமது வீடுகளில் தினசரி உணவுடன் சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். ( curd ) இப்போதுள்ள வெயிலின் தாக்கத்திருந்து நமது வயிற்றை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க, தயிர் உதவுகிறது.
தயிர் புரோபயாடிக்குகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதில் நல்ல அளவுப் புரதம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் கலோரிகள் குறைவாக உள்ளன.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று தெரிந்துகொள்ளவோம். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்தப் புரோபயாடிக்குகள் உணவை ஜீரணிக்க உதவுகின்றன, இதனால் உண்ணும் உணவிலிருந்து உடலுக்குத் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை நமது உடலில் உள்ள செல்கஎடுத்துக்கொள்கின்றன. கோடை காலத்தில் வெப்பம் காரணமாகச் செரிமான அமைப்பு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும்போது தயிர் எடுத்துகொள்வது நன்மை தரும்.
தயிர் புரதத்தின் நல்ல மூலமாகும் மற்றும் இதில் பி 12 மற்றும் டி போன்ற வைட்டமின்கள் உள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுகிறது.
குறிப்பாகக் கோடைகாலத்தில், இரைப்பை குடல் அழற்சி மற்றும் உணவு விஷம் போன்ற நோய்த்தொற்றுகளின் ஆபத்து அதிகமாக இருக்கும், அப்போது உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். தயிரில் கொழுப்பு மற்றும் கலோரி குறைவாக இருப்பதால், இது வெயிட் மேனேஜ்மெண்ட்க்கு முக்கிய பங்காற்றுகிறது.
இது புரதத்தின் ஒரு நல்ல மூலம் என்பதால் பசியைக் குறைக்கவும் உதவுகிறது. தயிர் உள்ள கால்சியம் உடலில் உருவாகும் பாராதைராய்டு ஹார்மோன் எனப்படும் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் வெயிட் மேனேஜ்மெண்ட்க்கு உதவுகிறது
வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு கால்சியம் தேவைப்படுகிறது. தயிர் உள்ள கால்சியம், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிர் உடலில் காயத்தினால் ஏற்படும் அழற்சியைக்(inflammation) குறைக்க உதவும் ஆன்டி-இன்ஃப்ளுமேஷன் பண்புகளைக் கொண்டுள்ளது.
தயிரில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. எனவே தயிர் எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட் ஆகும், இது டெட் ஸ்கின் செல்களை அகற்றவும், ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும் உதவும். தயிரை தவறாமல் உட்கொள்வது முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.
தயிர் பலவைகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் நமது பண்டைய கால ஆயுர்வேத மருத்துவத்தின் படி, கோடையில் தயிர் உட்கொள்வது உடலில் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ( curd ) ஏற்படுத்தும்,இது ஒரு மனிதனின் தோஷா- வாத, பித்தா அல்லது கப்பா (Vata, Pitta and Kapha) போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து தயிர் எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது.