பெண்களின் காதல் மொழி (love language)
பிப்ரவரி 14 காதலர் தினம் வரப்போகிறது. உங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா? எப்படி அதை தெரிந்துகொள்வது? இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பொதுவாக ஒரு பெண் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவ்வளவு எளிதாக யாராலும் கணிக்க முடியாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுவதை வைத்து ஒரு யூகத்துக்கும் வந்து விட முடியாது.
அதனால் தான், “ஆறு அது ஆழம் இல்ல, அது சேரும் கடலும் ஆழம் இல்ல, ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா” என்ற பாடல் வரிகளை முதல் வசந்தம் படத்தில் வரும் பாடலில் கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். அது உண்மைதான்
பொதுவாக பெண்கள் அதிகப்படியான விஷயங்களை நேரடியாக வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு நபரை பிடித்திருந்தால் கூட அதை மறைமுகமாகத்தான் கூறுவார்கள்.
ஒருவேளை ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணை பிடித்திருக்கிறது என்றால், அதற்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால், எந்த ஒரு ஆணும் அதை உணர்வதே இல்லை.
சரி, ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்றால் (love language), அவளுடைய காதல் மொழி எவ்வாறு இருக்கும்? கீழ்க்கண்ட விஷயங்களை சரியாக புரிந்து கொண்டாலே போதும்.
ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் (அவளுக்கு உங்கள் மீது காதல் இருக்கா? இல்லையா?) என்றால், அவள் உங்களிடம் இருந்து அன்பை மட்டுமே எதிர்பார்க்க ஆரம்பிப்பாள். நீங்கள் அவள் மீது காட்டும் அன்பு அவளுக்கு முக்கியமானதாக தெரியும்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அவள் மீது உங்கள் அன்பை காட்ட நேரும் போது புன்னகையுடன் ஏற்றுக்கொள்வாள். ஒருவேளை அவளுக்கு உங்கள் மீது காதல் இல்லையெனில், அவளது பார்வை கோபத்துடனும், ஒரு வகை கேள்வியுடனும் இருக்கும்.
நீங்கள் அவளிடம் எந்த ஒரு விஷயத்தை கூறும்போதும் அவள் உங்களை ரசிக்கிறாளா? அந்த விஷயம் அவளுக்கு பிடிக்கிறதா? என்பதை நீங்கள் அறிய வேண்டியது அவசியம்.
அதை எப்படி தெரிந்து கொள்வது? அவளுடைய உடல் மொழியை வைத்தே இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அவள் உங்களிடம் பேசும் போது ஒவ்வொரு அசைவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பொதுவாக பேசும் போது கண் தொடர்பு என்பது மிக முக்கியமானது.
அதை ஒரு பெண் அவளுக்கு பிடித்த ஆணிடம் மட்டுமே செயல்படுத்துவாள். (பிறரிடம் பேசும் போது அதிகபட்ச கண்தொடர்பு இரண்டு மூன்று நொடிகள் மட்டுமே இருக்கும்)
உங்கள் உரையாடல் அவளுக்கு பிடித்து இருந்தால் அவள் உங்கள் கண்களைப் பார்த்து பேச ஆசைப்படுவாள். அப்படி அவள் உங்களிடம் கண் தொடர்பு காட்டாவிட்டால் உங்களது பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
அதுவே தரையைப்பார்த்து பேசுவது, வேறு எங்காவது பார்த்துக்கொண்டு பேசுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் பேச்சை மாற்றி வேறு தலைப்பில் பேசுங்கள்.
இல்லையெனில், அவளுடனான உங்களது உரையாடல் அதுவே கடைசியாக இருக்கும். எனவே, ஒரு பெண்ணின் பார்வை உங்கள் மீது இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
அவள் முன் அவளுக்கு பிடித்த எவ்வளவு பெரிய பரிசை நீங்கள் கொண்டுபோய் வைத்தாலும் அவள் பார்வை உங்களை பார்த்து தான் இருக்கும். (பரிசின் மீதான பார்வை ஒன்றிரண்டு நொடிகள் மட்டுமே இருக்கும்)
அவளுடனான உங்கள் உரையாடலின் போது அவளுடைய உடல் தோரணைகள் கூட உங்கள் மீதான அவளது காதலை வெளிப்படுத்தும்.
இந்த உரையாடல் எப்போது முடிவுக்குவரும் என்ற முகபாவனையுடன், நெளிந்துகொண்டு பேசினால் உங்களுடைய பேச்சு அவளுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
அவளுக்கு உங்கள் பேச்சு பிடிக்கவில்லை என்றால் மரியாதையுடனும் அன்புடனும் அங்கிருந்து வெளியேறுவது அவசியம்.
இதுவே உங்களுடன் இருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாலோ அல்லது உங்கள் பேச்சு அவளுக்கு பிடித்து இருந்தாலோ சிரித்த முகத்தோடு, அவளது பார்வை உங்களை விட்டு மாறாமல் இருக்கும். அதை வைத்து அவள் உங்களை விரும்புவதை நீங்கள் உறுதி செய்யலாம்.
அவள் மனதில் நிறைய கவலைகள் இருக்கும் போதும், இல்லை மகிழ்ச்சியாக இருக்கும் போதும் அதை பகிந்துகொள்ள உங்களை தேடுகிறாள் எனில், அவள் உங்களை விரும்புகிறாள்.
அவளை சுற்றி நடக்கும் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் உங்களுடன் பகிந்துகொள்ள ஆர்வமாக இருப்பாள்.
நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து பேசும் பொழுது அவள் அதை 10 தலைப்புகளாக்கி உங்களுடனான உரையாடலை நீடித்துக்கொண்டே செல்வாள்.
மற்றவர்களிடம் “ஆங்ரி பேடாக” இருக்கும் அவள் உங்களிடம் மட்டும் அவளது குழந்தைத் தனத்தை வெளிக்காட்டுவாள்.
இது எல்லாம் சரிதான்… ஆனால், மேற்கண்ட அனைத்தையும் ஒரு பெண் உங்களுடன் காட்டுகிறாள் என்றால், அது காதலாக தான் இருக்கும் என்று 100 சதவீதம் கூறமுடியாது.. அவள் உங்களை நல்ல நண்பனாகவும் நினைக்க வாய்ப்புண்டு..
ஆகவே, அவளுடனான உங்களது உரையாடலை, ஒருமுறைக்கு பலமுறை ஆய்வு செய்தபின்னர் உங்களுடடைய காதலை வெளிப்படுத்துங்கள் பிரண்ட்ஸ்..