வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மேலும் 50 ரூபாய் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1015 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த மே ஒன்றாம் தேதி நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டன. இதையடுத்து சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.