ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தைப்பூசத்தை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அகில இந்தியச் செயலாளர் ஆன ஷானு மலைஜீ தலைமையில் காவிரி படுக்கைக்கு, காவடி பால்குடம், வேல் மற்றும் அனுமன் கொடி பாதையாத்திரையாக பக்தர்கள் வயலூர் முருகன் கோவிலுக்குச் சென்று உள்ளனர்.
இந்த நிலையில் ,பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி ஆகியவர் தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் இதுபோன்ற கொடிகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாகப் பக்தர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் அப்பொழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்தியச் செயலாளர் ஷானு மலை ஜி தெரிவிக்கையில்,
நமது நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் அவர்களது மதத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தும் உரிமை உள்ளது. மேலும் நாங்கள் பாதயாத்திரை செய்த எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் இந்தக் பாதயாத்திரைக்கு நீங்கள் அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழக மட்டும் என்று நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டமாகக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்த பாதயாத்திரையை நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக நடத்திவருவதாகவும், இந்த யாத்திரையில் நாங்கள் 21 பேர் மட்டும் கலந்துகொண்டு உள்ளனர். மேலும் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும்,
இந்த யாத்திரையில் நாங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல வில்லை பால் குடங்கள் மட்டும் தான் எடுத்துச் செல்கிறோம் என்று தெரிவித்து அனுமதி வழங்க வேண்டும் என்று தெறித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளக் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் கால தாமதம் ஏற்படவே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அம்மா மண்டபம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும் பேச்சுவார்த்தை சுமுகமாகப் பாதயாத்திரையில் கொடிகள் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த பாதை யாத்திரையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் இருக்க வயலூர் வரை காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அனுமதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.