இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் முக்கியத் தளபதிகள் மீது குண்டு வீசி இஸ்ரேல் ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, கடந்த சில நாட்களுக்கு முன் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது .
இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவில் வரும் நிலையில் இரு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read : சசிகுமாரின் நந்தன்’ படத்தை மனதார பாராட்டிய அண்ணாமலை..!!
இஸ்ரேல் மீது தற்போது நடத்திய தாக்குதல் சிறிய தண்டனைதான் தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் நடைபெற்றது உண்மை என்றும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரதமர் நெதன்யாகுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.