கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..
கடந்த ஆண்டு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்து, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
தற்போது, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில், போதை பொருள் நடமாட்டம் குறைய வேண்டும் என அக்கறையோடும், பொறுப்போடும் செயல்படும் காவல்துறைக்கு எனது நன்றிகள்.
காவல்துறை இதே ஆர்வத்தோடு செயல்பட்டு முற்றிலுமாக போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களும், பொதுமக்களும் இது சிறப்பான ஒரு திட்டம் என இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது கூறினார்கள்.
தமிழ்நாடு அரசு போதைப்பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக இறங்கி உள்ளோம்.
மாநிலத்தின் வளர்ச்சியை போதைப்பொருட்கள் பயன்பாடு பாதிக்கும். போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
இதற்காக, போதைப்பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.