இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். அதில் பெரும்பாலும் எலும்பு முறிவு, தலையில் படுகாயம் ஏற்பட்டு மரணச்சம்பவங்களும் நடக்கிறது.
இந்தியாவில் தோராயமாக 2019 -ல் 1.67 லட்சம் விபத்துகளும், 2020- 1.56 லட்சம் விபத்துகளும் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் டூவீலர் விபத்துக்களே அதிகம். விபத்தின்போது, சாலையிலோ அல்லது ஏதேனும் பாறை போன்ற கல், மரம் உள்ளிட்ட வலிமையானவற்றின் மீதோ மோதும் அபாயம் உள்ளது. இதனால் பல டூவீலர் விபத்துகள் மரணம் வரை இழுத்துச்செல்கிறது.
அந்த வகையில், எதிர்காலத்தில் விபத்துகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க , பிரபல நிறுவனம் ஒன்று ஏர்பேக் தயாரிக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக இரண்டுவகையான ஏர்பேக்குகளை உருவாக்கியுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, டூவீலர்களில் பைக் மற்றும் ஸ்கூட்டருக்கு ஏற்ப ஏர் பேக்குகளை உருவாக்கி அதனை Advance Simulation Tool-ல் வைத்து பரிசோதனையும் செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த புதிய திட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வகை, வாகன சீட்டிற்கு கீழே பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலையில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பை பெறலாம் எனவும், விபத்தின் போது ஏற்படும் மரணங்களை குறைக்க இந்த டூவீலர் ஏர்பேக் மிகப்பெரும் அளவில் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.