சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைகளில் இருந்து போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி இன்றைய காய்கறிகளின் விலை விளவரங்கள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் மக்காச்சோளம் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாக கடுன் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை மீட்டும் அதிகரித்து இன்று ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. அதன்படி சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இஞ்சியை பொறுத்த வரையில் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்டு வருகிறது. அதன்படி இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்பனை ஆகிறது.
மேலும் வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.