சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இந்து தர்மத்தை அழிப்பேன் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியும், தமிழக மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் திருச்சி திருவானைக் கோவில் அருகில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலக முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் ராஜசேகரன், தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் உட்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா
“வாழ்க பெரியார் என்று சொல்வது தமிழகத்தில் தான் நடக்கும். இது யார் ஒரு ஒழுக்க கெட்டவர் என்பதற்கு ஒரு உதாரணம் விலை மாதரை நாடுவதற்கு பொண்டாட்டியோடு உதவி நாடுவது பெண் விடுதலையா, அடிமைத்தனமா. ஈவேரா எப்பொழுதும் விலை மாதர் வீட்டில் இருந்த ஒரு இழிபிறவி. இந்த இழப்பிறவிக்கு இவ்வளவு கூட்டங்கள் எங்களை தடுக்க வந்திருக்கிறார்கள்.
அன்று சாதனத்தை மலேரியா, டெங்கு, கொரோனா போல சொன்னால் என்ன அர்த்தம். கொசுவை மருந்தடித்தால் சாகும் என கூறியது 80சதவீத மக்களை கொள்ளுவேன் என்று இனப்படுகொலை செய்வேன் என சொன்ன உதயநிதி ஸ்டாலின் இதுவரை கைது பண்ணாத இவர்கள் காவலர்களின் உடையை அணிவதற்கு தகுதியற்றவர்கள்.
நேர்மையாக அரசிடம் சம்பளம் வாங்கும் காவல்துறையாக இருந்தால் அந்த கிரிமினல் உதயநிதியை 24 மணி நேரத்தில் கைது செய்திருக்க வேண்டும். இவர்கள் என்னை பிடிக்கிறார்கள். வைரமுத்து மீது சின்மியா தொடர்பாக மீ டூ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வைரமுத்து போல கீழ்த்தரமான கேவலமானவர் ஒருவரும் இல்லை. ஆண்டாள் நாச்சியாரை பேசியது தப்பு என தீர்ப்பு இருக்கு. ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதுக்கெல்லாம் ஒரு காலம் வரும். திராவிட இயக்கங்கள் இல்லாமல் அழித்து பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்” என தெரிவித்தார்.