மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு இடையே சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தினந்தோறும் இயங்கப்பட்டு வருகிறது. இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
இந்நிலையில் இன்று அதிகாலை ரயிலில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. தூக்கத்தில் இருந்த எதுவும் அறியாத பயணிகள் அலறி அடித்து ஓடினர் அதிகாலை 3.27 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்த்தில் மொத்தம் ரயிலின் 11 பெட்டிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை. விபத்து குறித்து அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.மேலும் பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பாக பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.
Suryanagari express train accident in rajasthan,MLA sri kesaramji moke pe mojud,bhagwan ki krupa se koi janhani nahi hui, @shubhankrmishra pic.twitter.com/zjFUuyOwuM
— Chelaram Parmar (@chelaramparmar) January 2, 2023