பாகிஸ்தானில்(pakistan) இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் எனும் பகுதியில் இன்று அதிகாலை 3.38 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது, 4.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.