சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் (aarudhra scam)என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை சென்னை வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆருத்ராஎன்ற பெயரில் நீங்க வந்து நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் எனக்கவர்ச்சிகரமான விளம்பரத்தைக் கொடுத்து பல்லாயிரம் கோடிகளைப பொதுமக்களிடமிருந்து வாங்கி உள்ளன.
இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 1 லட்ச்த்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர்.இதில் அதிக அளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் முதலீடு செய்து உள்ளன. ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக,தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்பட 21 பேரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் மூடக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் முக்கிய இயக்குநர்களாகச் செயல்பட்டு வந்த ராஜசேகர்,உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளன.
இந்த நிலையில் ₹2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில், 3000 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.இவ்வழக்கில் இதுவரை பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் 61 இடங்களில் நடந்த சோதனையில் ₹6.35 கோடி பணம், ₹1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்; 22 கார்கள், வங்கிக்கணக்கில் இருந்த ₹96 கோடி டெபாசிட், ₹103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.