புதுக்கோட்டையில் தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதலே துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்,திருச்சி, தஞ்சாவூர்,வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த சோதனையில் திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள சர்க்கார் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரியில் 10 அமலாக்க துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை செய்து வருகின்றனர் – சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
குறைந்த டோக்கன்களை விநியோகம் செய்து அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.