தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (EPS AND RNRAVI) இன்று நேரில் சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதற்கேற்றாற் போல் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் முழு நேரமாக ஈடுபட்டு வந்தது வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
இப்படி இருக்கும் சூழலில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமனற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சதித்து மனு அளித்தார்.
இதுகுறித்து அதிமுக சமூக வலைதள பக்கத்தில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், தமிழகத்தில் கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் விவரம் (EPS AND RNRAVI) குறித்த பட்டியலையும் தமிழக ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி மனுவாக வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது