விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வந்த நிலையில் இன்று (08.07.24) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 10ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது . இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சுமார் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டது .
Also Read : தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் – சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வந்த நிலையில் இன்று (08.07.24) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட உள்ளது.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று 13 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.