தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் ( Election Code of Conduct ) நிறைவடைய உள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று அன்றே ரிசல்ட்டும் அறிவிக்கப்பட்டது .
அதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது .
Also Read : நாயகனாக மாபெரும் வெற்றி – திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கருடன் திரைப்படம்..!!
இதையடுத்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
மக்களவை தேர்தலின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடத்த ஜூன் 4ல் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் ( Election Code of Conduct ) இன்று நிறைவடைகின்றன.