டி20 உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் இந்திய அணி தனது வெற்றி ( ind vs ire ) பயணத்தை இனிதே தொடங்கி உள்ளது .
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் சுமார் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன .
உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வங்கதேசம் அணியை எளிதியில் வீழ்த்தியது.
இந்நிலையில் நியூயார்க்கில் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக கடினமான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
Also Read : தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு..!!
ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் . 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து வீரர்கள் 96 ரன்களில் ஆல் அவுட் ஆகினர் .
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரோஹித் மற்றும் பண்ட் அதிரடியில் மிரட்டினர் . இதில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் காயம் காரணமாக வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிதானம் காட்ட இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ( ind vs ire ) உலகக்கோப்பை தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.