நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
பிளிரும் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் வைத்து சிவப்பு மஞ்சள் வண்ணத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
கட்சிக்கொடியை விஜய் வெளியிட்டதுமே அக்கொடியில் இருந்த யானைகள் பகுஜன் சமாஜ் தேசியக்கட்சியை நினைவுபடுத்தின. அதற்கேற்றார் போல் அந்த தேசிய கட்சியும் விஜய் கட்சிக்கொடிக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்திருந்தது .
Also Read : உதயநிதிக்கு இதை தவிர வேறு என்ன தகுதி உள்ளது..?- வானதி சீனிவாசன் விமர்சனம்
பிஎஸ்பி எனும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய், தவேக கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்க பட்டிருந்தது .
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை. பிற கட்சிகளின் சின்னங்கள் பெயர்கள் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.