Mdmk Pambaram symbol : நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்ன ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது மதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுககூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் வைகோவின் மகன் துரை வையாபுரி போட்டியிடுகிறார்.
மதிமுகவுக்கு தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்தவழக்கறிஞர் அஜ்மல்கான் , தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர்.
அப்போது பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, பம்பரம் சின்னம் பொதுச் சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும் மதிமுக மனு மீது மார்ச் 27ஆம் தேதி (இன்று) முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே திருச்சியில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரை வையாபுரி, செத்தாலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கண் கலங்கியபடியே தெரிவித்தது அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது Mdmk Pambaram symbol.
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் நடைபெற உள்ளது. அப்போது பம்பரம் சின்னத்தை கேட்டு முறையிடுவோம் என்று திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!