உத்தரபிரதேசம், மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் ஒன்று தடம் புரண்டு கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த நடைமேடையின் மேலே ஏறி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேசம் மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது தடம் புரண்ட ரயில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த நடைமேடையில் ஏறி நின்றது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜூன் 2ஆம் தேதி ஒடிசா, பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ரயிலில் தீப்பிடிப்பது, தடம் புரண்டு விபத்து என ஏற்படும் விபத்துக்களால் பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.