உத்தரகாண்ட் : சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய 24 ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களுக்குக் பாராட்டுகள் குவிந்து வருகிறது .
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் பணியில் இருந்த 41 சுரங்க தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி வெளியில் வரமுடியாமல் மாட்டிக்கொண்டனர். திட்டத்தட்ட 17 நாட்கள் உள்ளேயே சிக்கி தவித்த 17 சுரங்க தொழிலாளர்களுக்கு உணவு ஆக்சிசன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சுரங்கத்தில் துளையிட்டு தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு இரவு பகல் பார்க்காமல் உழைத்தது .
இதையடுத்து நேற்று இரவு சுரங்கத்தில் சிக்கிய தொழிலார்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த மீட்பு பனியின் போது அமெரிக்க இயந்திரம் 47 மீ துளையிட்ட நிலையில், அசூர வேகத்தில் களமிறங்கிய ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள், கை வேலைப்பாடாகவே மீதமுள்ள 13 மீ தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். இவர்களின் இந்த இந்த பணி தொழிலாளர்களை மீட்க மிகவும் உதவியதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக ‘எலி வளை’ சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டப்படுவதைத் தடுக்க, கடந்த 2014ல் ‘எலி வளை’ சுரங்க நடைமுறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்க பெரிதும் உதவியாக இருந்த ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் ஒரே நாளில் ஹீரோவாக மாறிவிட்டதாக அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.