உலகின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் “ஸ்டார்ஷிப் ராக்கெட்டின்” (starship) முதல் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்ற நிலையில், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய நிலையில், மனிதர்களை ராக்கெட்டில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லுவதற்காக ஸ்டார்ஷிப் ராக்கெட் (starship) உருவாக்கப்பட்டது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, சில நிமிடங்களிலேயே விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது.
மேலும், இது உலகின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்பட்ட நிலையில், இந்த ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம் டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இன்று நடைபெற்றது. அங்கு இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ராக்கெட் கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த நடு வானில் வெடித்து சிதறியது. இதையடுத்து, இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் Rapid unscheduled disassembly காரணமாக ஸ்டேஜ் செப்பரேஷனுக்கு முன்பாக வெடித்ததாக தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப குழு ஆராய்ச்சி செய்யும் எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.