தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்பொழுது அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விளையாட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்து தடை செய்யக் கோரிக்கைகள் எழுந்தனர்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாகக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உரிய அறிக்கைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் போன்ற விபரங்களில் , இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.