திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் .லிருந்து காலியாக உள்ள மாவட்ட வளப்பயிற்றுநர், (District Resource Person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB& CB) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்:
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர்:
மாவட்ட வளப்பயிற்றுநர், (District Resource Person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB& CB)
தகுதி:
Sociology, Social work, Social Work Management ஆகியவையில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று, 6 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு துறையில் பட்டத்துடன், சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது 8 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள்/முன்னுரிமை ஏதும் கோர இயலாது.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்படி பணிக்கு விண்ணப்பம் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி நிராகரிக்கப்படும். செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக
- தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
இணையவழி விண்ணப்பக் காலம் 31.03.2023 காலை 11.00 மணி முதல் 10-04-2023 மாலை 5.00 மணி வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.வேலைவாய்ப்பு அறிவிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.04.2023