Ayalaan Collection:நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( ஜனவரி 12) வெளியான படம் தான் அயலான்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாஸ், பானுப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சரத் கே ல்கர் வில்லனாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார்.
இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2030 – ல் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறான் ஆர்யன்.
அதற்கு காரணம் அவன் கையில் அப்படியான ஒரு கருவி இருக்கிறது.இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன்,அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது.
ஆர்யனுக்கும் ஏலியனுக்கும் நடக்க இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக இயற்கையின் மீது காதல் கொண்ட அர்ஜூன் ஏலியனுடன் கை கோர்க்கிறான்.
ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி அர்ஜூனுக்கு கை மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
Also Read:https://x.com/ITamilTVNews/status/1746119426519576862?s=20
இந்நிலையில் 6 வருட உழைப்பாக வெளியாகி இருக்கும் அயலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு செய்து உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி படம், சுமார் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
வரும் நாட்களில் வசூலில் அயலான்(Ayalaan Collection)என்ன மாதிரியான மாற்றங்கள் வர போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.