‘பிச்சக்காரன் 2’ படபிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை நடித்துக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளா நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியை மையமாக வைத்து வெற்றி பெற்ற தமிழ் திரை படமான பிச்சைக்காரனின் மையமாக கொண்டு இத்திரைப்படம் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் கதையாகும், அவர் இறந்து கொண்டிருக்கும் தனது தாயைக் காப்பாற்ற ஒரு மத வழிபாட்டின் ஒரு பகுதியாக பிச்சைக்காரனாக 48 நாட்கள் நீண்ட ரகசிய வாழ்க்கையை நடத்துகிறார். இப்படத்தில் ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, ஒய்.ஜி.மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘பிச்சக்காரன் 2’ படப்பிடிப்பில் காயம் அடைந்தார். இந்த படதில் மலேசியாவில் நடந்த செட்டில் ஆக்ஷன் காட்சிகளை நடித்துக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மலேசியாவில் உள்ள லங்காவியில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். நடிகரின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது உடல்நலப் பாதிப்பை குறித்து டிவிட்டர் பதிவிட்டு உள்ளார். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறி இருந்தார்.இதனை தொடர்ந்து மலேசியாவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சகேணனையில் உள்ள சிறப்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கபட உள்ளதாகவும்,மேலும் அவருக்கு முகத்தில் அதிக காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் சர்ச்ஜரி செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.