முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே (ADMK) கவலை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கூடிருந்த திரளான மக்களிடம் எழுச்சி உரையாற்றிய அவர் கூறியதாவது :
முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே கவலை மக்களை சந்தித்தால்தான் அவர்கள் அடையும் துயரங்கள் பற்றி முதல்வருக்கு தெரியும்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாகும்!
ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே . வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து கட்டணங்களும் திமுக ஆட்சியில் உயர்ந்துவிட்டது.
Also Read : https://itamiltv.com/new-liquor-introduced-in-tasmac/
1998ஆம் ஆண்டு பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான். உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? ( ADMK ) அதிமுக கட்சியே இருக்காது எனக் கூறிய பாஜகவின் இராம சீனிவாசன் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்றைய பரப்புரையின்போது தக்க பதிலடி கொடுத்தார்.