ஏப்ரல் 1 முதல் சந்தைகளில் விற்பனையாகும் அத்தியாவசிய மருந்துகளின் (essential medicines) விலை உயருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மருந்து மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மருந்து உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், அந்த கோரிக்கையை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் (essential medicines) விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரிப்புக்கு ஏற்றவாறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11% மேல் உயர உள்ளது.
அந்த வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் உள்ளிட்ட 384 அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை மருந்துகளின் விலை உயர்த்தப்பட உள்ளது.
இதனால், அத்தியாவசிய மருந்துகளான காய்ச்சல், நோய் தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.