மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க, சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிரமான சிலுவம்பாளையத்திற்கு இன்று காலை வருகை தந்தார்.
தொடர்ந்து நெடுங்குளம் ஊராட்சிக் குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: துவங்கியது வாக்குப்பதிவு – அண்ணாமலை கூறிய அதிரடி வார்த்தை!
பின்னர், நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: “முதல் தலைமுறை வாக்காளர்கள், வாக்காளர் பெருமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் குமார், மருமகள் திவ்யா ஆகியோர் வாக்குப் பதிவு மையத்துக்கு நடந்து சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சேலத்தில் gஆலை 9 மணி நிலவரப்படி 14.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.