பேஷன் என்ற பெயரில் கை முதல் அந்தரங்க பாகங்கள் வரை டாட்டூ போட்டு மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்த “ஏலியன் பாய்” குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்ஸடாவில் தனது வித்தியாசமான டாட்டூவால் பிரபலமடைந்தவர் தான் “ஏலியன் பாய்” என்னும் ஹரிஹரன்.கண் , வாய் , நாக்கு என இவர் டாட்டூ போடாத இடமே இல்லை என்ற அளவுக்கு தீவிர டாட்டூ காதலனாக வலம் வந்த இவர் திருச்சியில் டாட்டூ சென்டர் ஒன்றையும் நடத்த வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திருச்சியில் டாட்டூ போடுவதற்கு நாக்கை வெட்டியதாக கைதான ஏலியன் பாய் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி படுகொலை..!!
உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை ஹரிஹரன் கட்டணம் பெறுவாராம் . இதுமட்டுமின்றி இதுவரை மூன்று பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாட்டூ போடுவதற்காக நாக்கை இரண்டாக வெட்டிய புகாரில் ஏலியன் பாய் மற்றும் அவரது நண்பர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இவர் குறித்து வெளியாகி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.