திருப்பூரில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பாண்டியன் நகர், சத்யா காலனி அருகே வாழ்ந்து வரும் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று (அக்.8) பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர் .
இச்சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயஙளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து விபத்து நடந்த இடத்தில ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி கூறியதாவது :
சரவணக்குமார் என்பவர் கோயில் திருவிழாவுக்காக வெடிகளை தயாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். சரவணக்குமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசென்ஸ் வைத்துள்ளார் ஆனால் இங்கு தயாரித்தது சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.