Vengaivayal Issue | வேங்கைவயல் விவகாரம் தொடர்பான DNA சோதனை குறித்த வழக்கை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது.
இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டத்தில் வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த 31 பேர் DNA பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர்.
அதில் 10 பேர் மட்டுமே DNA பரிசோதனைக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால்,இதற்கு 10 பேரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – VCK press meet
10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே சம்மன் அனுப்பினர். ஆனால்,இதற்கு 10 பேரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து,புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
நவம்பர் 2023 28 ஆம் தேதி 10 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757279877093294473?s=20
இந்த வழக்கை விசாரித்தநீதிபதி ஜெயந்தி, 10 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரி மாற்றம்: வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பால்பாண்டிக்கு பதிலாக கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டியிடம் கேட்டபோது, ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தேன்.
ஆகையால், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, தஞ்சாவூர் சிபிசிஐடி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.